search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து பிரதமர்"

    பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல.
    வெலிங்டன் :

    நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்ற பெண் தலைவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல. பிரதமரின் 3 வயது மகள் நெவ்விடம் இருந்துதான்.

    பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவரது மகள் நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்து விட்டாள். அதைக்கண்டு அதிர்ந்துபோனார், பிரதமர் ஜெசிந்தா. இருந்தாலும், “நீ படுக்கையில் அல்லவா இருக்க வேண்டும், டார்லிங்” என கூறி சமாளித்தார். தொடர்ந்து, “நீ படுக்கையில் இருக்க வேண்டும் டார்லிங். ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” என கூறினார்.

    தொடர்ந்து அவர் கேமராவைப் பார்த்து, “தூங்கும் நேரம் தவறி விட்டது இல்லையா?” என சிரித்து நாட்டு மக்களை சமாளித்தார்.

    இதுபற்றிய செய்தி அறிந்த அனைவரும், நாட்டுக்கே பிரதமரானாலும், தன் குழந்தைக்கு அவர் தாய் அல்லவா என சிலாகித்துப்போயினர்.
    ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள்.
    வெலிங்டன்:

    நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.

    சிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார்.

    அதில் அவர், “டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை” என தெரிவித்தார்.

    மேலும், “நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டு இருந்தார். 
    நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டெர்ன் மகப்பேறு விடுப்புக்கு பின்னர் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு வந்து தனது பணிகளை கவனித்துகொண்ட துணை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். #Ardernmaternityleave
    வெலிங்டன்:

    நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் ஜெசின்டா ஆர்டெர்ன்(38).  இவரது கணவர் க்ளார்க் கேஃபோர்ட் .

    26-10-2017 அன்று நியூசிலாந்து நாட்டு பிரதமராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே, அர்டர்ன் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் முடிந்த நிலையில், மகப்பேறு விடுப்பில் இருந்த அர்டர்ன், ஆக்லாந்து நகரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் கடந்த 21-6-2018 அன்று அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

    `நீவ் தே அரோஹா' என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை பிறந்து ஆறு வாரங்களான நிலையில், மகப்பேறு விடுப்பு முடிந்து கடந்த வியாழக்கிழமை ஜெசின்டா தம்பதியர் தலைநகர் வெலிங்டன் வந்தடைந்தனர்.



    வெலிங்டன்  விமான நிலையத்தில் பேட்டியளித்த ஜெசின்டா, ‘என் வேலைக்காக என் குழந்தையையோ, வீட்டுக்காக அலுவலகத்தையோ நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

    என் வாழ்நாளிலேயே வேகமாகக் கடந்த ஆறு வாரங்கள் இவைதான். என் குழந்தையின் தாய் என்ற பொறுப்புடன், சுமார் ஐம்பது லட்சம்  மக்கள் வாழும் இந்த நாட்டையும்கவனித்துக்கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

    என் கடமைகளைத் தவறாமல், எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிவேன். உங்கள் எல்லாருடைய உறுதுணையும் இருந்தால், நிச்சயம் என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார். அன்றிலிருந்தே தனது அலுவல்களை அவர் கவனிக்க தொடங்கினார்.

    இந்நிலையில், மகப்பேறு விடுப்புக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் ஜெசின்டா இன்று (திங்கட்கிழமை) பாராளுமன்றத்துக்கு வந்தார். பாராளுமன்ற மாடத்தில் அவர் நுழைந்தபோது சக மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் கரவொலியால் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்


    பின்னர் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அவர், மகப்பேற்று விடுப்பு காலத்தில் தனது பணிகளை கவனித்துகொண்ட துணை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

    உலகளவில், பிரதமர் பதவியில் இருக்கும்போதே குழந்தையை ஈன்றெடுத்த இரண்டாவது பெண் ஜெசின்டா ஆர்டெர்ன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோ தனது பதவிக்காலத்தில்  1990-ம் ஆண்டு  குழந்தை பெற்றார் என்பது நினைவிருக்கலாம். #Nicetobeback #NZPM  #Ardernreturns #Ardernmaternityleave
    ×